ரவி உயிருக்கு ஆபத்தில்லை: பிரேம்குமார் உறுதி
காஞ்சிபுரம்:
போபாலில் தலைமறைவாக இருக்கும் ரவி சுப்ரமணியம் தற்கொலை செய்து கொள்ள மாட்டார், அவரது உயிருக்குஆபத்தில்லை, இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று எஸ்.பி. பிரேம்குமார்கூறியுள்ளார்.
தலைமறைவாக இருக்கும் ரவி சுப்ரமணியம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் அவர்தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்தன, பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விட்டதாக செய்திகள்வந்தன.
இந் நிலையில் எஸ்.பி. பிரேம்குமாருக்கு மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரிலிருந்து ரவி சுப்ரமணியம் கடிதம்எழுதியதாக ஒரு தகவல் வெளியானது. இதனையடுத்து ரவி சுப்ரமணியத்தின் நண்பர்களான வழக்கறிஞர்கள்தாமஸ், சந்திரன், குமார், ராஜா ஆகியோர் காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவிற்கு வந்தனர்.
பிரேம்குமாரை சந்தித்து ரவி சுப்ரமணியம் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்துவழக்கறிஞர் தாமஸை மட்டும் போலீஸார் உள்ளே அனுமதித்தனர்.
தாமஸ் உள்ளே சென்று பிரேம்குமாரை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த அவர்,
நான் சென்னை பெருங்குடியில் வசித்து வருகிறேன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றுகிறேன். ரவிசுப்ரமணியம் எனது 25 ஆண்டு கால நண்பர். அவர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் அவரதுகுடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். எனவேதான் ரவிசுப்ரமணியம் குறித்து அறிந்து கொள்வதற்காகபிரேம்குமாரை சந்திக்க வந்தேன்.
பிரேம்குமாரை நான் சந்தித்தபோது, அவர் என்னிடம் ரவி சுப்ரமணியம் எழுதிய கடிதம் ஒன்றைக் காட்டினார்.போபாலில் இருந்து அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது, 4 பக்கங்களில் கடிதம் உள்ளது.
அதில், தனக்கும் சங்கரராமன் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. போலீஸார் தேடிவருவதால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளதாக ரவி சுப்ரமணியம்எழுதியிருந்தார்.
இதுகுறித்து பிரேம்குமாரிடம் கேட்டபோது, ரவி சுப்ரமணியம் உயிருக்கு ஆபத்தில்லை. போபால் போலீஸாரிடம்இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரவி சுப்ரமணியத்தை கைது செய்து விடவாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
பிரேம்குமாரின் இந்தப் பதிலை ரவி சுப்ரமணியத்தின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவுள்ளேன் என்றார் தாமஸ்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications