விஜயேந்திரரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் இன்று காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேர் கைதாகியுள்ள நிலையில் இளையசங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் இன்று காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பூஜைகள் நடத்தவேண்டியிருப்பதால் அது முடிய 2 மணி ஆகி விடும் என்று விஜயேந்திரர் தரப்பில் எஸ்.பி. பிரேம்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பூஜைகளை முடித்த பிறகு 2 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜயேந்திரருக்கு பிரேம்குமார் உத்தரவிட்டார்.
அதேபோல் பிற்பகல் விஜயேந்திரர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீஸார் 75 நிமிடங்கள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் எப்போது வர வேண்டும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவரிடம்போலீஸார் கூறினார்கள்.
காஞ்சி மடத்தின் வழக்கறிஞர் தியாகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், துணைக் கண்காணிப்பாளர் சக்திவேல் விஜயேந்திரரிடம்விசாரணை நடத்தினார். கடல் கொந்தளிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் சென்றுவிட்டதால்,விஜயேந்திரரை மீண்டும் மடத்திற்கு செல்ல சக்திவேல் அனுமதித்தார்.
விசாரணை நடந்த இடத்தில் விஜயேந்திரர் தனது தம்பி ரகுவை சந்தித்தார். ரகு கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்துஎனக்குத் தெரியாது என்று கூறினார்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications