இந்தோனேஷியாவில் 25,000 பேர் பலி: தாய்லாந்தில் 2,000
ஜகார்த்தா:
இந்தோனேஷிய நாட்டில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக்கு 25,000 வரை பலியாகியிருக்கலாம் என்று இந்தோனேஷியாதுணை அதிபர் யூசுப் கல்லா கூறியுள்ளார். அதே போல தாய்லாந்தில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர்,
மெடான் நகரத்தில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட வந்த அவர், இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:
எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து சரியான புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. இருப்பினும் 21,000 முதல் 25,000 பேர் வரைபலியாகியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன் எனக் கூறினார்.
பெரும் உயிர்ச் சேதம் சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில்தான் நடந்துள்ளது. மேற்குப் பகுதியில் மீட்புப் பணி நடவடிக்கைகள் எதுவும்இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தாய்லாந்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000த்தைத் தாண்டிவிட்டது.












Click it and Unblock the Notifications