கொலை: ஜெயேந்திரருக்கு தொடர்பில்லை- விஜயேந்திரர்
காஞ்சி:
சங்கரராமனை ஜெயேந்திரர் கொலை செய்யக் கூறியிருக்கவே மாட்டார் என்று இளையவரான விஜயேந்திரர் கூறினார்.
இன்று இரண்டாவது முறையாக காட்டு பங்களாவில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தக் கொலைக்கு சங்கராச்சாரியார் காரணமாகவே இருந்திருக்க மாட்டார். அவர் இதைச் செய்திருக்கவே மாட்டார். இதைதான்போலீசாரிடம் கூறிவிட்டு வந்தேன்.
எப்போது ஜெயேந்திரரை நான் சந்திக்கப் போகிறேன் என்று போலீசார் என்னிடம் கேட்டனர்.
என்னை வேலூர் சிறைச்சாலைக்கு வர வேண்டாம் என ஜெயேந்திரர் கூறிவிட்டார். அதனால் தான் போகவில்லை என்பதைபோலீசாரிடம் தெரிவித்துவிட்டேன். எப்போது ஜெயேந்திரர் வரச் சொல்கிறாரோ அப்போது போய் அவரைச் சந்திப்பேன் என்றும்கூறியிருக்கிறேன் என்றார் விஜயேந்திரர்.
அவரது வழக்கறிஞர்கள் கூறுகையில், விஜயேந்திரரிடம் பொதுவான கேள்விகளைத் தான் போலீசார் கேட்டுள்ளனர் என்றனர்.
சங்கரராமன் கொலை குறித்தும், சங்கராச்சாரியாரின் கைது குறித்தும் விஜயேந்திரர் கருத்து தெரிவிப்பது இதுவேமுதன்முறையாகும்.












Click it and Unblock the Notifications