கருணாநிதி நலமுடன் உள்ளார்: சோனியா சந்திப்பு
சென்னை:
நான் நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனசன் டிவியில் தோன்றி விளக்கம் தந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநதியின் உடல் நலம் குறித்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று வதந்திபரவியது. சென்னை நகரில் பல பகுதிகளில் திமுகவினர் கடைகளை மூடக் கோரி அடாவடியில் இறங்கினர்.
இதனால் தி.நகர், வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிளில் கடைகள் அடைக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயம், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோமருத்துவமனை முன் கூடி அழுதபடி இருந்தனர்.
இந் நிலையில் சன் டிவியில் கருணாநிதி சிறப்புப் பேட்டி அளித்தார். இரவு ஒளிபரப்பான அந்த பேட்டியில்,
முதுகு வலி காரணமாகத்தான் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். நான் நலமாகத்தான் இருக்கிறேன்.சில விஷமிகள் எனது உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்பி வருவதாக அறிந்தேன்.
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளேன். அதன் பிறகு வீடுதிரும்புவேன். இப்போது நமது நாடு சந்தித்து வரும் சோக மயமான நிகழ்வுகள் (கடல் கொந்தளிப்பு) குறித்தநேரத்தில் இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் கடும் கண்டனத்துக்குரியவர்கள் ஆவர்.
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கூடுதல் நிவாரண நிதி கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குகடிதம் எழுதியுள்ளேன் என்றார் கருணாநிதி.
தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட பரபரப்பும், சிறு வன்முறைகளும் கருணாநிதியின் இந்த டிவி பேட்டிக்குப்பிறகே முடிவுக்கு வந்தன.
சோனியா சந்திப்பு:
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றுகருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications