பிணங்களை எரித்தபோது தீ விபத்து: குடிசைகள் நாசம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்:

The scene in Nagai

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் கடல் கொந்தளிப்பினால் இறந்தவர்களின் உடல்களை சாலையோரத்தில்வைத்து எரித்தபோது பல குடிசைகள் தீப்பிடித்து சாம்பலாயின.

கீச்சாங்குப்பம் பகுதியில் ஏராளமான சடலங்களை மொத்தமாக சாலையோரத்தில் வைத்து அப் பகுதியினர்எரித்தனர். அப்போது அங்கிருந்த பல குடிசை வீடுகளில் தீப்பிடித்துக் கொண்டது.

இதில் அந்தக் குடிசை வீடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இதனால் அந்தப் பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

வியாபாரிகள் கடை அடைப்பு:

இதற்கிடையே கடல் கொந்தளிப்பினால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை, திருச்சிஉள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தி வியாபாரிகள் தங்களது இரங்கலைத்தெரிவித்தனர்.

கடல் கொந்தளிப்பினால் ஆயிரக்கணக்கானோர் இறந்த சோகத்தில் தமிழகம் மிதக்கிறது. இந்த நிலையில் மதுரைநகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாபாரிகள் கடைகளை மூடினர்.

மேலும், நாகை, கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஏராளமான நிவாரணப்பொருட்களுடன் வியாபாரிகள் குழு ஒன்று 3 லாரிகளில் புறப்பட்டுச் சென்றது.

இதேபோல திருச்சி நகரிலும் இன்று வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். காந்தி மார்க்கெட் உள்ளிட்டமுக்கியமான சந்தைகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+