சென்னை வருகிறார் தரம்சிங்: ரூ.2 கோடி நிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Scene in Cudalore

கர்நாடக முதல்வர் தரம்சிங் தனது அமைச்சர்களுடன் இன்று சென்னை வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ.2 கோடி நிதியுதவிஅளிக்கிறார்.

தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி அலைகளுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த 86 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பலர் வேளாங்கண்ணியில்உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் கர்நாடக முதல்வர் தரம்சிங் ஜெயலலிதாவைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கர்நாடகா சார்பில் ரூ.2 கோடி நிதியுதவியை அளிக்க விரும்புவதாக தரம்சிங் அப்போது கூறினார்.அதன்படி இன்று தரம்சிங்கும் அவரது அமைச்சர்களும் சென்னை வருகின்றனர்.

இலங்கைக்கும் உதவி:

கர்நாடகத்தில் இருந்து இலங்கைக்கு 22 டன் உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் நிருபர்களிடம் தரம்சிங் பேசியதாவது:

பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கர்நாடக அரசு ரூ.15 கோடிவழங்குகிறது. கர்நாடக அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளனர். இதன் மூலம்மேலும் ரூ.14 கோடி கிடைக்கும்.

காங்கிரஸ், ஜனதா தள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக தருகிறார்கள் என்று கூறினார்.

தரம்சிங்கைப் போல் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் முதல்வர்ஜெயலலிதாவிடம் இரங்கலையும், நிவாரணப் பணிகளுக்கு உதவுவதாக வாக்குறுதியும் அளித்தனர்.

திருநாவுக்கரசர் ரூ. 12 லட்சம்:

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான திருநாவுக்கரசர் தமிழக, பாண்டிச்சேரி, அந்தமான் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 12லட்சம் வழங்கியுள்ளார்.

மார்க்சிஸ்ட் எம்.பிக்கள்:

அதே போல மார்க்ஸ்சிஸ்ட் எம்.பிக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை சுனாமி தாக்குதல் மீட்புப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர்.

தமிழக பொதுப் பணித்துறை ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தையும், தொழிலதிபர் ஜெயபால் கரோடியா ரூ. 1 லட்சத்தையும்வழங்கியுள்ளனர்.

நகை வியாபாரிகள் ரூ. 51 லட்சம்:

தமிழக நகை வியாபாரிகள் சங்கத்தினர் ரூ. 51 லட்சம் வழங்கியுள்ளனர்.

சி.ஆர்.பி.எப் ரூ. 4.4 கோடி உதவி:

இந் நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 4.4. கோடியை வழங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+