எல்.கணேசனுக்கு பிடிவாரன்ட்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனுக்கு ஜாமீனில்வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டம் கோட்டைமைதானத்தில் மதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.கணேசன் ஆஜராகவில்லை. அதையடுத்து அவருக்கு ஜாமீனில்வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications