வேதாரண்யம் பறவைகள் சரணாலயம் அழிந்தது

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

Birds

நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் வேதாரண்யம் பறவைகள் சரணாலயம் அடியோடு அழிந்துவிட்டது.

கடல் கொந்தளிப்பினால் தமிழகத்தில் நாகை மாவட்டம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,900 உடல்கள் மீட்கப்பட்டுஅடக்கம் செய்யப்பட்டுள்ளன. பல கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டன.

இதில் வேதாரண்யம் பறவைகள் சரணாலயமும் தப்பவில்லை. 30 சதுர கிலோமீட்டருக்கு விரிந்துள்ள இந்த சரணாலயத்தில் ஒரு உயிர் கூடமிஞ்சவில்லை. இங்கிருந்த அரிய வெளிநாட்டு பறவைகளும் காணாமல் போய்விட்டன.

2,000 பிளாக் பக் பறவைகள், அதே அளவு மான்கள் என எல்லா உயிரினங்களையும் அலை அடித்துச் சென்று விட்டதாகவும்,சரணாலயத்தில் 4 முதல் 5 அடி உயரத்திற்கு கடல் நீர் சூழ்ந்திருப்பதாகவும், அது வற்றிய பின்பே உயிரிழந்த பறவைகள் மற்றும் விலங்குகள்குறித்து தெரியவரும் என்றும் சரணாலய காப்பாளர் ஏ.டி.பருவா நிருபர்களிடம் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு பறவைகள் வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+