நதிகள் இணைப்புக்கு புதிய குழு
டெல்லி:
நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த செயற்குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது.
நதிகளை இணைப்பது தொடர்பாக மாநிலங்களிடம் ஒத்த கருத்தை ஏற்படுத்துவது, இத்திட்டத்திற்கு வழிகாட்டுவது, நிதி ஆதாரங்களைக்கண்டறிவது தொடர்பாக சிவசேனா எம்.பி. சுரேஷ் பிரபு தலைமையில் கடந்த 2002 டிசம்பர் மாதம் செயற்குழு அமைக்கப்பட்டது.
அக்குழு தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்த நிலையில், பாஜக ஆட்சி போனது.
இதையடுத்து தற்போது அந்தக் குழுவையே காங்கிரஸ் கூட்டணி அரசு இப்போது கலைத்துவிட்டது.
இதற்குப் பதிலாக புதிதாக ஒரு குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், தொழில் நுட்ப நிபுணர்களும்இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை செயலாளர் துக்கல் நிருபர்களிடம் கூறியதாவது:
முந்தைய செயற்குழு தனது திட்ட மதிப்பீடுகளை மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. அதனுடைய வேலைகள் முடிவடைந்ததையடுத்துஅக்குழு கலைக்கப்பட்டுள்ளது.
இப்போது நீர்வளத் துறை இணை செயலாளர் நீனா கார்க் தலைமையில் நதிகள் இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதொடர்பாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையத்தின் 2 தொழில் நுட்ப அதிகாரிகள் இந்த சிறப்பு குழுவிற்கு உதவி செய்வார்கள் என்றார்.
குறைந்த பட்ச செயல்திட்டத்தில் கூறியிருப்பதுபோல, நதிகளை இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஇன்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications