பெண்கள் கதறல்: கண் கலங்கிய மன்மோகன் சிங்
குளச்சல்:
![]() |
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வந்த பிரதமர் மன்மோகன் சிங்,பெண்களின் கதறலைப் பார்த்து கண் கலங்கினார்.
நேற்றிரவு மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், பிரதமர் அலுவலகஅமைச்சர் பிருத்வி செளகான் ஆகியோருடன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார் பிரதமர்.
இன்று காலை அவர் கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள குளச்சலுக்கு வந்த அவர் அங்குபாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 172 உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்புபுனித மேரி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3,000 மக்களை சந்தித்தார்.
பிரதமரைப் பார்த்த ஆயிரக்கணக்கான பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதைக் கண்ட குழந்தைகளும் அழ அதைப் பார்த்துமன்மோகன் சிங் கண் கலங்கினார். பின்னர் பேசிய மன்மோகன் சிங்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு மத்திய அரசு சிறப்பு உதவிகளைவழங்கும். போன உயிருக்கு எவ்வளவு நிதி கொடுத்தாலும் ஈடாகிவிடாது. ஆனால், ஆண்களை இழந்த அவர்களது குடும்பத்தினர்மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்னென்ன உதவிகள் முடியுமோ அதை நிச்சயம் செய்வோம்.
அதேபோல் வீடுகள், படகுகள் மற்றும் வலைகளை இழந்தவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவோம் என்றார்.
பின்னர் அவர் மரமாடி பகுதிக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். இதையடுத்து ஹெலிகாப்டரில் நாகப்பட்டினம்,காரைக்கால் ஆகிய பகுதிளைப் பார்வையிட்டார் சிங்.
இப் பகுதிகளை மன்மோகன் சிங் நேரில் பார்வையிடுவதாகத்தான் திட்டம் இருந்தது. ஆனால் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கும்அபாயம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, மன்மோகன் சிங் ஹெலிகாப்டரில் இருந்தபடியே இப்பகுதிகளைப் பார்வையிட்டுத்திரும்பினார்.













Click it and Unblock the Notifications