அந்தமானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர பூகம்பம் நேர்ந்த இந்தோனஷியாவின் சுமத்ரா பகுதியில் இந்திய நேரப்படி இன்று காலை மீண்டும்ஓரளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல அந்தமானிலும் சக்தி மிக்க நில நடுக்கம் ஏற்பட்டது.
![]() |
அந்தமானை நில அதிர்வுகள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். நேற்று இரவு 11.32 மணிக்கும் நள்ளிரவு 3.40 மணிக்கும் அந்தமான்,நிகோபார் தீவுகளை 5.2, 5.0 என்ற அளவிலான நில நடுக்கங்கள் மீண்டும் தாக்கின. இன்று காலை 11.56 மணிக்கு 6.2 என்ற அளவுக்குபலமான நில நடுக்கம் தாக்கியது.
கடந்த ஒரு வாரத்தில் இந்தப் பகுதி 70க்கும் அதிகமான முறை நில அதிர்வுகளைச் சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அந்தமானில் சேதமடைந்த சிறிய துறைமுகங்களை சீரமைக்கும் பணி தொடங்கிவிட்டது. குடிநீர் வழங்கலும் சீர்செய்யப்பட்டுவிட்டது.













Click it and Unblock the Notifications