தெற்காசியாவில் பலி எண்ணிக்கை 1.5 லட்சமானது
ஐநா சபை:
தெற்காசியாவில் சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டி வருவதாக ஐ.நா. சபை கூறியுள்ளது. இதில்இந்தோனேஷியாவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
![]() |
ஐநா சபையின் அவசரகால மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜேன் எகலெண்ட் இதைத் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தோனேஷியாவின் ஏசெக் மாகாணத்தில் தான் மிக அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. மொத்தத்தில் தெற்காசியா முழுவதும்1,50,000 பேர் பலியாகியுள்ளனர். ஏசெக் பகுதியில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகக் கூடஇருக்கலாம். அந்த எண்ணிக்கை கடைசி வரை நமக்குத் தெரியாமல் கூட போகலாம்.
இதனால் சாவு எண்ணிக்கை கூடுதலாகத் தான் இருக்கும். பெயரில்லாத பல மீனவ கிராமங்கள் தெற்காசியாவில் அழிந்து போயிருக்கின்றன.அவற்றில் வசித்து சுனாமிக்கு பலியானவர்கள் கணக்கிலேயே வரலாமல் போய்விட வாய்ப்புண்டு என்றார்.
இதற்கிடையே இந்தோனேஷிய நலத்துறை அமைச்சர் சிதி பதிலா கூறுகையில், பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைஎட்டியிருக்கலாம் என்று நினைக்கிறோம். நாங்கள் இனிமேல் எண்ணிக்கையை சொல்லப் போவதில்லை. காரணம் அது உண்மையானஎண்ணிக்கையாக இருக்கப் போவதில்லை.
மேற்கு சுமத்ராவில் பலியானவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்றார்.













Click it and Unblock the Notifications