அந்தமானில் மீண்டும் 3 முறை நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
அந்தமானில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர்ச்சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்துஉடனடித் தகவல் இல்லை.
கடந்த மாதம் 26ம் தேதியிலிருந்து அந்தமானில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந் நிலையில் இன்று அதிகாலை 03.53மணிக்கு கிழக்கு கார் நிக்கோபார் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 ஆக இது பதிவாகியது.
அடுத்த 5 நிமிடங்களில் நிக்கோபாரின் மேற்குக் கடலோரப் பகுதியில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக இதுபதிவானது. 3வது நிலநடுக்கம் 04.42 மணிக்கு கிரேட் நிக்கோபார் பகுதியில் ஏற்பட்டது. இது 5 ரிக்டர் அளவில் இருந்தது.
இந்த 3 நிலநடுக்கங்களால் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.













Click it and Unblock the Notifications