சென்னையில் மீண்டும் லேசான நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை
![]() |
சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டுவெளியேறினர்.
அந்தமானில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந் நிலையில், சென்னையில் சேத்துப்பட்டு, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஆகியபகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் இப்பகுதிகளில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் வசிப்பவர்கள்அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நில அதிர்வால் உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ இல்லை. கீழ்ப்பாக்கத்தில் ஒரு குடியிருப்பில் சுவரில் விரிசல் ஏற்பட்டதாககூறப்பட்டது. ஆனால், இது நில அதிர்வால் ஏற்பட்ட விரிசல் அல்ல, பழைய விரிசல்தான் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நில அதிர்வு குறித்து வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புதான் இந்தநில அதிர்வு என்றனர்.
இந்த நில அதிர்வு சென்னை மக்களிடையே பெரும் அச்சத்தைக் கிளப்பியுள்ளது.













Click it and Unblock the Notifications