மெரீனாவில் மீண்டும் மக்கள் கூட்டம்
சென்னை:
சுனாமி பீதி சற்றுக் குறைந்துள்ள நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஓரளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை என்ற பெயரைப் பெற்றுள்ள மெரீனா கடந்த 26ம் தேதி சுனாமி அலைகளின் தாக்குதலுக்குஆளானது. மிக நீண்ட கடற்கரையையும் தாண்டி கடல் அலைகள் வந்ததால் சென்னை மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
26ம் தேதி சம்பவத்திற்குப் பிறகு மெரீனா கடற்கரைக்கு கூட்டம் அதிகம் வரவில்லை. போலீஸாரும் கடலுக்கு அருகே மக்கள் செல்வதற்குத்தடை விதித்திருந்தனர். இந் நிலையில் தற்போது சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாலும், மெரீனா கடற்கரையில் போலீஸாரின் கெடுபிடி சற்றுக்குறைந்துள்ளதாலும், மக்கள் கூட்டம் மீண்டும் மெரீனாவுக்கு வரத் தொடங்கியுள்ளது.
கடற்கரையில் மக்கள் அமர்ந்து சுனாமி தாக்குதல் குறித்து விவாதிப்பதைக் காண முடிகிறது. அதேபோல, சில தைரியசாலிகள் கடலில் கால்நனைக்கவும் தவறவில்லை.












Click it and Unblock the Notifications