ஆடிட்டர் வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைத்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Radhakrishnanஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு உயர் நீதிமன்றம் இன்றுஜாமீன் வழங்கியது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் பின்னர் சங்கர மட பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதுநடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கனவேநிராகக்கபப்ட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில்,

ஜெயேந்திரரை ரூ. 25,000 சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கு மேலும் இருவரின் ஜாமீனும் விடுவிக்கிறேன்.

இருப்பினும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவரை சிறையிலிருந்துவிடுவிக்க வேண்டும் என்றார் நீதிபதி.

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது வரும் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைநடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+