சேது சமுத்திரத் திட்டத்துக்கு பாதிப்பில்லை: பாலு
நாகை & நாகர்கோவில்:
![]() |
சுனாமி தாக்குதலால் சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
சுனாமியால் சென்னை துறைமுகத்துக்கு ரூ. 12 கோடியும், சென்னை சாந்தோம் கலங்கரை விளக்கத்துக்கு ரூ. 4 கோடியும் சேதம்ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் குளச்சல், மனக்குடி போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர் நாகர்கோவிலில் நிருபர்களிடம்பேசுகையில்,சுனாமியால் தமிழகம் மிகக் கடுமையான சேதத்தை சந்தித்துவிட்டது. அதே போல அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் கடும் சேதம்ஏற்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் ரூ. 12 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கலங்கரை விளக்கமும் பயங்கர சேதத்துக்கு உள்ளாகிவிட்டது.இதை சீர் செய்ய ரூ. 4 கோடி செலவாகும்.
அந்தமானில் ரூ. 1000 கோடிக்கு உள் கட்டமைப்புக்கு சேதம் விளைந்துள்ளது. அந்தமான் துறைமுகம் மட்டும் ரூ. 200 கோடி சேதத்தைசந்தித்துள்ளது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத விவரம் குறித்து தமிழக அரசு இதுவரை மத்தியஅரசுக்கு முழுமையாகத் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு எல்லா வகையிலும் உதவத் தயாராக இருந்தாலும் தமிழக அரசு அதை சரியாகபயன்படுத்த முன் வரவில்லை.
கன்னியாகுமரியில் சேதமடைந்த இரு பாலங்களையும் மத்திய அரசே கட்டித் தரும். இதற்காக ரூ. 15 கோடியை ஒதுக்கிவிட்டேன். இந்தப்பணிகள் உடனே தொடங்கும். ஒரு வருடத்துக்குள் இரு பாலங்களும் தயாராகிவிடும். அதுவரை தாற்காலிகமாக இரு சிறிய பாலங்கள்கட்டித் தரப்படும் என்றார்.
பின்னர் நாகப்பட்டிணம் வந்த பாலு அப் பகுதியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை ஆகியஇடங்களைப் பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் பேசுகையில், சுனாமியால் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் ஏதும் பாதிக்கப்படாது.ரூ. 2,000 கோடி மதிப்பிலான இத் திட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிறைவேற்றப்படும்.
நாகப்பட்டிணத்தில் மீனவர்களின் குடிசைப் பகுதிகளுக்கு ரூ. 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உயிர்ச் சேதம் மிக அதிகம். கடும்சேதமடைந்துவிட்ட நாகப்பட்டிணம் துறைமுகத்தை மீண்டும் கட்டித் தருவோம் என்றார்.













Click it and Unblock the Notifications