2 தமிழக கிராமங்களை தத்தெடுக்கிறது சட்டீஸ்கர்
சென்னை:
![]() |
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 2 கடலோர கிராமங்களை தத்தெடுக்க சட்டீஸ்கர் மாநில அரசு விருப்பம்தெரிவித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங் சென்னை வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அவர் சுனாமி பாதித்த தமிழககடலோரப் பகுதிகள் குறித்து ஜெயலலிதாவுடன் விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரமண் சிங் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கடலோரப் பகுதியைச் சேர்ந்த 2கிராமங்களைத் தத்தெடுக்க சட்டீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்வருடன் பேசினேன்.
நாங்கள் தேர்ந்தெடுக்கும் 2 கிராமங்களையும் புனரமைப்பதற்கான முழுச் செலவுகளையும் சட்டீஸ்கர் அரசு ஏற்றுக் கொள்ளும்.மேலும், அந்தக் கிராமங்களில் உள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், புதுவாழ்க்கையைத்தொடங்குவதற்கான உதவிகளையும் சட்டீஸ்கர் அரசே செய்யும்.
கடலூர், நாகப்பட்டனம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களை என்னுடன் வந்த குழுவினருடன் நான்பார்வையிடவுள்ளேன். அதன் பிறகு எந்தக் கிராமங்களைத் தத்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார் அவர்.
ரமண்சிங் கடலூர், நாகை மாவட்டங்களுக்குச் செல்லும்போது அவருடன், பாஜக மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா,அனந்தகுமார் ஆகியோரும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications