தேர்தல் அதிகாரியாக மீண்டும் நரேஷ் குப்தா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நரேஷ் குப்தா (54) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்கிறார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த மிருத்யுஞ்சய் சாரங்கி, சில மாதங்களுக்கு முன்பு தொகுதி வரையறைகுழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு டெல்லிக்கு பணி மாறிப் போனார்.
இதைத் தொடர்ந்து தற்போது புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நரேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். நரேஷ் குப்தாதமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
தற்போது அவர் மாநில திட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்து வருகிறார். நரேஷ் குப்தா, ஏற்கனவே 1998ம் ஆண்டு முதல் 2000வரை தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்துள்ளார்.
தமிழக அரசின் தேர்தல் துறை செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அத்துடன் உள்துறை செயலாளர் பொறுப்பையும்அவர் சில காலம் வகித்துள்ளார்.












Click it and Unblock the Notifications