சுனாமி பீதியை கிளப்பிய வாலிபருக்கு தர்ம அடி
சென்னை:
![]() |
சுனாமி அலை வருவதாக பீதியைக் கிளப்பி வாலிபரை பொது மக்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர். பின்னர் அவரை போலீஸில்ஒப்படைத்தனர்.
சுனாமி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் தமிழக மக்கள் மீளவில்லை. கடலைப் பார்த்தாலே பீதி ஏற்படுகிறது. இந் நிலையில்சுனாமி வருவதாக கூறி தேவையில்லாமல் பயறுத்திய வாலிபரை பொதுமக்கள் அடித்து நொறுக்கி ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸில்ஒப்படைத்துள்ளனர்.
சென்னை மெரீனா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் குடிபோதையில் ஒரு வாலிபர் நள்ளிரவு 1 மணியளவில் சுனாமி அலைவருவதாக கூறி அங்கிருந்த மக்களை எழுப்பியுள்ளார். இதனால் பயந்து போன மீனவ மக்கள் அடித்துப் பிடித்து எழுந்து ஓட முயற்சித்தனர்.
ஆனால் கடலில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருப்பதைப் பார்த்துக் குழம்பினர். அப்போது தான் குடிபோதையில் அந்த நபர் சுனாமி அலைவருவதாகப் புரளியைக் கிளப்பியது புரிந்தது.
கோபமடைந்த மக்கள் அந்த நபரை சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். வாய் உடைந்து, உடம்பில் பல இடங்களில் ரத்தக்காயத்துடன் அவர் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் ஜாக்கி என்று தெரியவந்தது.













Click it and Unblock the Notifications