தெற்காசியாவில் பலி 1.55 லட்சம்
ஜகார்தா:
![]() |
சுனாமியால் இந்தோனேஷியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 94,000த்தை எட்டிவிட்டதாக அந்நாட்டு நலத்துறை அறிவித்துள்ளது.
அதே போல இலங்கையில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 40,000க்கும் அதிகம் என்று அஞ்சப்படுகிறது.
அடுத்தபடியாக தமிழகத்தில் சுமார் 12,000 பேரும், அந்தமானில் 3,000 பேரும் பலியாகியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாகதெற்காசியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
இதே போலத் தான் இலங்கையிலும் ஏகப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மழை காரணமாக மீட்புப் பணி மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து உடல்களை மீட்டு வருகின்றனர்.
நிவாரணப் பணிக்காக புலிகள் இயக்கம் ரூ. 30 கோடியை ஒதுக்கியுள்ளது. மிக அதிகமானவர்கள் பலியாகியுள்ளதால் பலியானவர்களின்சரியான எண்ணிக்கை என்னவென்று இறுதி வரை தெரியாமல் கூட போகலாம் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கையில் மீட்புப் பணிகளுக்காக 1,500 வீரர்களையும் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
இந் நிலையில் சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications