ரூ. 125 கோடியில் சுனாமி எச்சரிக்கை கருவிகள்: இந்தியா திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Rescue operation in Nagai

இந்தியக் கடல் பகுதியில் சுனாமி அலைகள் வருவதைக் கண்டுபிடிக்கும் கருவிகளைப் பொறுத்த ரூ. 125 கோடியை மத்திய அரசுஉடனடியாக ஒதுக்கியுள்ளது.

இது குறித்து மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,

சுனாமி அலைகளைக் கண்டறியும் கருவிகளைப் பொறுத்துவது, அது தொடர்பான ஆய்வுகளை முடுக்கிவிடுவது ஆகியவை குறித்துவிவாதிக்க அடுத்த வாரத்தில் கடலாராய்ச்சி மற்றும் பல்துறை தொழில்நுட்ப வல்லுனர்களின் கூட்டத்தை இந்த மாதம் கூட்டியுள்ளோம்.

இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவ வருமாறு அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களையும் அழைத்துள்ளோம்.

ஆழ்கடல் கடலில் அலைகளின் அழுத்தத்தைக் கண்டறியும் சென்சர்கள், அலைகளின் போக்கை கண்காணிக்கும் கருவிகள் ஆகியவை கடல்பகுதிகளில் பொறுத்தப்படும். இந்திய கடல் பகுதியின் முப்பரிமாண டிஜிட்டல் மாடல் உருவாக்கப்பட்டு இந்தக் கருவிகளில் இருந்து வரும்சமிஞைகளைக் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கம்ப்யூட்டர் டிஜிட்டல் மாடலின் உதவியுடன் புவி இயற்பியல் வல்லுனர்கள் இந்தியக் கடல் பகுதிகளின் அலையோட்டங்களைக்கண்காணிப்பாளர்கள். கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பங்களும் பிற நாடுகளுடன் இணைந்து கண்காணிக்கப்படும்.

இந்திய கடல் பகுதியின் டிஜிட்டல் மாடலை உருவாக்க கடலடி சோனார் ஆய்வுகளும் அவசியம். அவையும் மேற்கொள்ளப்படும் என்றார்ராமமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+