வீதி, வீதியாக நிதி திரட்டிய டிவி நடிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

The scene in Coastal village

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சின்னத்திரை நடிகர், நடிகைகள் சென்னையில் வீதி, வீதியாக சென்று நிதிதிரட்டினர்.

இந்த நிதி சேகரிப்பை சாலிகிராமத்தில் உள்ள சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் நடிகர் ராதாரவி தொடங்கி வைத்தார்.

டிவி நடிகர், நடிகைகள் வசந்த், ராஜேந்திரன், மெளனிகா, பானு பிரகாஷ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், இயக்குனர்கள் கே.ஆர்.செல்வராஜ்,விடுதலை, கவிதா பாரதி ஆகியோரின் தலைமையில் நடிகர், நடிகைள் மூன்று குழுக்களாக அண்ணாநகர், அரும்பாக்கம், வடபழனி,எம்ஜிஆர் நகர், வளசரவாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிதி மற்றும் துணிமணிகள், பொருட்கள் சேகரித்தனர்.

ஒய்.ஜி.மகேந்திரன், விஷ்வா, வெங்கட், சேத்தன், அபிஷேக், பாவனா, தேவிப்ரியா, தீபா வெங்கட், சிந்து, தாரிகா, வினோதினி உட்பட150 சின்னத்திரை கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை வட பழனியில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் சின்னத்திரை கலைஞர்களின் கூட்டம் நடந்தது. இதில்சுனாமி தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது தங்களது ஒரு நாள் சம்பளத்தை சுனாமி நிவாரண நிதிக்குவழங்குவதாக அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+