குடும்பத்தினர் 32 பேரை தேடும் மருத்துவமனை ஊழியர்
போர்ட்பிளேயர்:
![]() |
சுனாமி அலை தாக்குதலில் காணாமல் போன தனது குடும்பத்தினர் 32 பேரைத் தேடிவரும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார் கார் நிக்கோபார் மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்.
கார் நிக்கோபார் பகுதியில் உள்ள ஜே.பி. பந்த் மருத்துவமனையில் கிளர்க்காகப் பணிபுரிபவர் அப்துல் குத்தூஸ். கடல் கொந்தளிப்பு நிகழ்ந்ததினத்தன்று இவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அன்றைய தினம் சுனாமி அலைகள் தாக்கியதில் இவரது மனைவி, குழந்தைகள், இரண்டு விதவை சகோதரிகள், அவர்களது குழந்தைகள்,இரண்டு விதவை மருமகள்கள் மற்றும் அவர்களது குழந்தைகள என 32 பேரைக் காணவில்லை.
அவர்களையும் அவர்களது உடல்களையும் ஒரு பக்கம் தேடியலைந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைஅளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் குத்தூஸ்.
அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான குவிந்துள்ளதால் மருத்துவமனையில் வேலைப் பளு அதிகமாகி விட்டது. மேலும்நாங்கள் இருந்த பகுதிகளைத் தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லை.
எனது குடும்பத்தினரைத் தேடும்படி அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரி வருகிறேன். இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. அனைத்துமுகாம்களிலும் தேடிப் பார்த்தேன். அங்கு எனது குடும்பத்தினர் யாரும் இல்லை.
வேறு தீவுகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை சுமந்து கொண்டு மீட்பு விமானங்கள் வரும்போதெல்லாம் விரைந்து சென்று பார்ப்பேன்.இதுவரை எனது குடும்பத்தினரில் ஒருவர் கூட வரவில்லை.
நாங்கள் தங்கியிருந்தது கடலுக்கு அருகாமையில்தான். இந்தத் தீவில் உயர்ந்த மேட்டுப்பகுதிகள் எதுவும் இல்லாததால் பாதிப்பு அதிகமாகிவிட்டது என்றார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications