13 மாவட்டங்கள் சுனாமியால் பாதிப்பு: அரசு
சென்னை:
தமிழகத்தில் 13 மாவட்டங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கை:
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கி சுனாமி பேரலை, வரலாறு காணாத வகையில் திடீரெனவும்,கொடூரமாகவும் ஏற்பட்டதாகும். கடலோர மாவட்டங்களில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்த சுனாமி பேரலையால் அழிவுஏற்பட்டுள்ளது.
சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பு மிகக் கடுமையானதாகும். குடிசைகளும், உறுதியாகக் கட்டப்பட்ட வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன. மீன்பிடி படகுகள் சுக்கு நூறாகி விட்டன, பஸ்களும், பெரிய டேங்கர்களும் தூக்கி வீசப்பட்டுள்ளன.
கடலோர பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களது உடமைகளை இழந்துள்ளார்கள். ஒரு சில நமிடங்களில் ஏராளமான உயிர்கள்பறிபோயுள்ளன. இதில் நாகை மாவட்டம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற கடலோர மாவட்டங்களான திருவாரூர், சென்னை,காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களும் மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த 13 மாவட்டங்களிலும் நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பேரழிவால்பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications