சங்கர மடத்திற்குப் புது மேலாளர் நியமனம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய மேலாளராக பொள்ளாச்சி மகாதேவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி ஜெயேந்திரர், நிர்வாகத்தை கவனித்து வந்த ரகு, மடத்தின் மேலாளர் சுந்தரேசஅய்யர், கணக்காளர் விஸ்வநாத அய்யர் ஆகியோர் உள்ளே போய்விட்ட நிலையில் மடத்தின் நிர்வாகம்ஸ்தம்பித்துள்ளது.
நீலகண்ட அய்யர் என்ற வயதில் மூத்த நிர்வாகி கையெழுத்திட்ட செக்குகளை வங்கிகள் திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மட விஷயங்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டார் நீலகண்ட அய்யர்.
வழக்கமான பூஜைகளை விஜயேந்திரர் தவறாமல் மேற்கொண்டு வருகிறார். ஆனால், மடத்தின் கீழ்மட்டஊழியர்களைக் கொண்டு நிதி நிர்வாகத்தை அவரால் கவனிக்க இயலவில்லை.
இதையடுத்து மடத்திற்குப் புதிய மேலாளராக பொள்ளாச்சி மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரதுநியமனத்துக்கு ஜெயேந்திரரின் ஒப்புதலும் பெறப்பட்டதாதத் தெரிகிறது.
நேற்றே அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மகாதேவன் இதுவரை பொள்ளாச்சியில் உள்ள சங்கர மடகிளையின் நிர்வாகத்தை கவனித்து வந்தார். மேலும் டெல்லியில் உள்ள சங்கர மட நிர்வாகத்தையும் அவரேகட்டுப்படுத்தி வந்தார்.
காஞ்சி மடத்திற்குப் புதிய மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் மடத்தின் அன்றாடப் பணிகள் தொய்வின்றி நடக்கவழி ஏற்பட்டுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications