பிரபாகரன் குறித்த செய்தி வாபஸ்: இலங்கை வானொலி பல்டி
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த செய்தியை இலங்கை வானொலி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த 26ம் தேதி இலங்கையைத் தாக்கிய சுனாமிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுதலைவர் பொட்டு அம்மன் ஆகியோர் பலியாகியிருக்கலாம் அல்லது காணாமல் போனவர்கள் பட்டியலில் அவர்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று இலங்கை அரசுக்குச் சொந்தமான இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் நேற்று செய்தி வெளியிட்டது.
இந்த செய்திக்கு விடுதலைப் புலிகள் உடனடியாக மறுப்பும், கடும் கண்டனமும் தெரிவித்தனர். துயரமான இந்த நேரத்தில்இலங்கை அரசு இதுபோன்ற விஷமத்தனமான பொய்ச் செய்தியை பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றுஅவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில், பிரபாகரன், பொட்டு அம்மன் குறித்து வெளியிட்ட செய்தியை வாபஸ் பெறுவதாக இலங்கை வானொலி இன்றுஅறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கொழும்பு நகரில் இலங்கை வானொலி நிறுவனத்தின் உயர் அதிகாரிவெளியிட்டார்.
இருப்பினும், எதற்காக செய்தி வாபஸ் பெறப்படுகிறது என்ற விளக்கத்தை இலங்கை வானொலி தெரிவிக்கவில்லை.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications