கர்நாடகத்தில் ஆற்றில் பஸ் விழுந்து 57 பேர் பலி
பீஜப்பூர்:
கர்நாடகம் மாநிலம் பீஜப்பூரில் அரசு பஸ் ஆற்றில் விழுந்ததில 57 பேர் பலியாகிவிட்டனர்.
நிடுகுன்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை இவ் விபத்து நடந்தது.
குல்பர்கா மாவட்டம் சிதாபூரில் இருந்து ஹூப்ளிக்குச் சென்று கொண்டிருந்த அந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகப்பேருந்து அலமாத்தி அணையின் மாபெரும் வாய்க்காலில் விழுந்தது.
குறுகலான வளைவில் திரும்பியபோது 15 அடி ஆழமுள்ள இந்தக் கால்வாய்க்குள் பஸ் பாய்ந்தது. கால்வாயில் நீர்நிரம்பியிருந்ததால் பஸ், நீருக்குள் முழுவதுமாக மூழ்கியது.
இதில் 66 பேர் பயணம் செய்தனர். அவர்கள் தூக்கத்தில் இருந்துபோது இந்த விபத்து நடந்தது. பலியான 57 பேரின் உடல்களும்மீட்கப்பட்டுவிட்டன. பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே சென்று மீட்புப் பணியினர் உடல்களை வெளியே எடுத்தனர்.
இறந்தவர்களில் 18 பெண்களும், 2 குழந்தைகளும் அடக்கம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விபத்தில் பலியானார்கள்.இவர்கள் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஜாவர்கி பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும் 9 பேர் நீந்திக் கரை சேர்ந்துவிட்டனர்.
பஸ்ஸை வெளியே இழுக்கும் முயற்சியில் முதலில் 2 கிரேன்கள் ஈடுபட்டன. ஆனால், பஸ்ஸை வெளியில் எடுக்க முடியவில்லை.இதையடுத்து மேலும் 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. இப்போது கால்வாயில் இருந்து நீரை வெளியேற்றி பஸ்சை வெளியேஎடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கால்வாய் அருகே பஸ்ஸைத் திருப்ப ஓட்டுநர் முயன்றபோது, வண்டி கட்டுபாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததாக போலீஸார்தெரிவித்தனர். இது குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ள கர்நாடக முதல்வர் தரம்சிங், போக்குவரத்துத் துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கேயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கார்கே அறிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications