புறக்கணிக்கப்படும் புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி
சென்னை:
![]() |
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து புதியதமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சுனாமி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் எங்களுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்படும்போதெல்லாம் புதிய தமிழகம் தவறாமல் அழைக்கப்பட்டது. ஆனால்அதிமுக அரசு எங்களைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக செயல்பட்டு வருகிறது.
சுனாமி பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழக அரசு சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது. அதிகாரிகள் பாரபட்சமாகநடக்கிறார்கள். பெரும்பாலான மீனவர்களும், விவசாயிகளும் உரிய நிவாரணம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 64 கிராமங்களில் விவசாயிகள், கடல் நீர் நிலத்தில் புகுந்ததால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை நிவாரணம் எதையும் தமிழக அரசு வழங்கவில்லை.
நிவாரணப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். பாரபட்சமின்றிநிவாரண உதவிகள் அனைவருக்கும் போய்ச் சேரும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.
கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்குபுதிய தமிழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் சுதர்சனம் கொல்லப்பட்டுள்ளார், முன்னாள் திமுக அமைச்சர்ஆலடி அருணா சொந்த ஊரில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
என் மீது கடந்த ஜூலை மாதம் வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த வழக்கில் இதுவரை யாரையும் பிடிக்காமல் போலீஸார் தாமதம் செய்துவருகிறார்கள். இந் நிலை கண்டனத்துக்குரியது என்றார் கிருஷ்ணசாமி.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா













Click it and Unblock the Notifications