வேலூர் செல்லும் சுஷ்மா, சிங்கால்
டெல்லி & காஞ்சிபுரம்:
ஜாமீனில் வெளிவரும் ஜெயேந்திரரை வரவேற்க பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், வி.எச்.பி. செயல் தலைவர் அசோக் சிங்கால்ஆகியோர் வேலூர் செல்கின்றனர்.
ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த வழக்கில் ஆரம்பம் முதலே பாஜக எடுத்த நிலைப்பாடு சரி என்பதையே இது காட்டுகிறது. லட்சக்கணக்கான இந்துக்களின்மனவேதனையை இந்தத் தீர்ப்பு குறைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். நீதி மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றுகூறியுள்ளார்.
இதேபோல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
சிறையிலிருந்து வெளியே வரும் ஜெயேந்திரரை வரவேற்க சுஷ்மா ஸ்வராஜ், அசோக் சிங்கால் ஆகியோர் வேலூர் செல்கிறார்கள்.
மகிழ்ச்சியில் சங்கர மட பக்தர்கள்:
இதற்கிடையே ஜெயேந்திரருக்கு சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது சங்கர மட பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் தலைமை குற்றவியல்நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான பத்திரங்களை சமர்ப்பித்து, இரு நபர் உத்தரவாதங்களை ஜெயேந்திரர் தரப்பு சமர்ப்பித்த பின்னர் அவர்ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்.
ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையாவது சங்கர மட பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான பக்தர்கள் இன்றுசங்கர மடத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications