நாகையில் தொடரும் சுனாமி புரளி
நாகப்பட்டினம்:
![]() |
சுனாமி அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந் நிலையில் சுனாமி அலைகள் மீண்டும் தாக்கப் போகிறது என்று சிலர் அடிக்கடி கிளப்பும் புரளிகளால் மக்கள்பெரிதும் அச்சமடைகின்றனர்.
தங்களது உடைமைகளை அப்படியே போட்டு விட்டு வீட்டை விட்டு அலறியடித்தவாறு வெளியேறுகின்றனர். பீதியடையவேண்டாம் என்று போலீஸார் கூறும் சமாதானங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இது குறித்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தமுத்துவேல் என்ற மீனவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சுனாமி அலையில் எங்களது உற்றார், உறவினர்கள் கண்ணெதிரிலேயே அடித்துச் செல்லப்பட்டனர். அதனால் நாங்கள் ரிஸ்க்எடுக்க விரும்பவில்லை. பயப்பட வேண்டாம் என்று இங்கு இருக்கும் போலீஸார் எங்களிடம் கூறினாலும், மக்களிடம் சுனாமிகுறித்து அச்சம் போகவில்லை என்றார்.
இத்தகைய வதந்திகளால் திருவாரூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு வரும் பேருந்துகளும் பாதி வழியில் திரும்பிச்சென்றுவிடுகின்றன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
வதந்திகள் மீண்டும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறைக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தின்புதிய ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த வேலையில் போலீஸாருடன் இணைந்து செயலாற்ற கடலோர கிராமத்து இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு குழுஅமைக்கவிருக்கிறோம்.
மீன்களில் தொற்றுநோய்க் கிருமிகள் பரவியிருப்பதாக கிளம்பிய வதந்திகள் குறித்தும் மக்களிடம் விளக்கி வருகிறோம். பல்வேறுபரிசோதனைகளின் முடிவில் எந்த தொற்றுநோய்க் கிருமியும் மீன்களில் இல்லை என்பது நிருபணமாகியுள்ளது. இதை மக்களிடம்எடுத்துக் கூறிவருகிறோம் என்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்













Click it and Unblock the Notifications