தமிழகத்தில் குழந்தைத்தனமான ஆட்சி: விஎச்பி.
சென்னை, ஹைதராபாத் & மும்பை:
தமிழகத்தில் குழந்தைத்தனமான ஆட்சி நடைபெறுகிறது என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்தார்.
ஜாமீனில் வெளிவரும் ஜெயேந்திரரை வரவேற்க அசோக் சிங்கால் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம்அவர் கூறியதாவது:-
விஜயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சீர் கெட்டு விட்டது இங்கு குழந்தைதனமானஆட்சி நடக்கிறது.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா மட்டும் காரணம் இல்லை. கூட்டு சதி நடந்து இருக்கிறது.
விஜயேந்திரர் கைதைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும். இதில் இந்துக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்துக்களின் பொறுமைக்கு சோதனை
இந் நிலையில், விஜயேந்திரர் கைது இந்துக்களின் பொறுமைக்கு ஒரு சோதனை என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் தடுத்துநிறுத்தப்படாவிட்டால் பொறுமை எல்லை மீறி வெடித்து விடும் என்றும் ஆந்திர மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மத்தியஅரசுக்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர மாநில வி.எச்.பி. செயலாளர் முரளிதர் ராவ் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
இந்து மதத்தின் மீது தமிழக அரசு நடத்தி வரும் தாக்குதல்களை மத்திய அரசு மெளனமாகப் பார்த்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சங்கர மடத்தின் புனிதத்தை தமிழக போலீஸார் பூட்ஸ் கால்களுடன் உள்ளே நுழைந்து களங்கப்படுத்தி விட்டனர்.
தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனம் இருப்பதுபோன்ற ஒரு அச்ச உணர்வு மக்களிடம் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக இந்தவிவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கூறினார்.
மும்பையில் சாலை மறியல்:
இதற்கிடையே விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மும்பையில் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
மும்பை வி.எச்.பி. தலைவர் தலைவர் அருண் ஹண்டா ஆகியோர் தலைமையில் 200 தொண்டர்கள் தெற்கு மும்பையில் உள்ள பாபுல்நாத்கோயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த மறியல் அரை மணிநேரம் நீடித்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications