தமிழ் பெண் குழந்தையை தத்தெடுக்கும் சந்திரிகா
கொழும்பு:
சுனாமி அலையால் பெற்றோரை இழந்த ஒரு தமிழ் பெண் குழந்தையைத் தத்தெடுக்கப் போவதாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுனாமி அலைத் தாக்குதலில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப்பகுதிகளில்தான் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த பல தொண்டு நிறுவனங்கள்ஈடுபட்டுள்ளன.
நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவது தொடர்பாக அதிபர் சந்திரிகா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்சந்திரிகா பேசும்போது, கடல் கொந்தளிப்பில் பெற்றோரை இழந்து வாடும் ஒரு தமிழ் பெண் குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன்என்றார்.
புலிகள் கண்டனம்:
இந் நிலையில் சந்திரிகாவின் இந்த அறிவிப்பு வெறும் அரசியல் ஸ்டன்ட் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் இலங்கை வந்தபோது தமிழர் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுத்தார். இதனால் சர்வதேசஅளவில் சந்திரிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை சமாளிக்கவே இந்த யுக்தியைக் கையாள்கிறார்.
தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு தேவையான நிவாரணப் பணிகளை செய்யவில்லை. இப்போது தமிழர் பெண்ணை தத்தெடுப்பதன்மூலம் தமிழ் மக்களை அவரால் சமாதானப்படுத்திவிட முடியாது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications