மதுரை பொங்கல் விழா ரத்து
மதுரை:
சுனாமி சோகம் காரணமாக மதுரையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழா இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும்வெளிநாட்டவர்களுக்காக 2 நாள் விழா மதுரையில் நடைபெறும்.
இந்த விழாவின்போது கிராமப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்,பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் அவர்களும் பங்கேற்பர், அலங்காநல்லூரில் நடைபெறும் பிரபலமானஜல்லிக் கட்டு நிகழ்ச்சியையும் அவர்கள் நேரில் காண ஏற்பாடு செய்யப்படும்.
இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரி பாஸ்கரன்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டினருக்காகபொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட சோகம் காரணமாக பொங்கல் விழாவை ரத்து செய்துள்ளோம். வழக்கமானநிகழ்ச்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன,
அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். அங்கு சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்படும்காலரிகளில், வெளிநாட்டுப் பயணிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அலங்காநல்லூர்பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எந்தவித ஏமாற்றம் ஏற்படாது என்றார்.
பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை சரி செய்யும்விதமாக பிப்ரவரி மாதம் மதுரையில் 15 நாள் கலை விழாவுக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த விழா நடைபெறும்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications