அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டெல்லி:
போலீஸ் காவலில் சங்கராச்சாரியாரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான வீடியோ தொலைக்காட்சிகளுக்கு போனது எப்படிஎன்பது குறித்து 2 வாரத்தில் விளக்கம் தரக் கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே போல இளையவரான விஜயேந்திர் கைது செய்யப்பட்ட விதம் (ஷூ கால்களுடன் 50க்கும் மேற்பட்ட போலீசார் மடத்துக்குள்நுழைந்து, அதிரடியாக அவரைக் கைது செய்தது) குறித்தும் விளக்கம் தருமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் தரப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் அவசர அவசரமாக இளையவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூஜைசெய்து கொண்டிருந்தபோது, அனுமதி கூட இல்லாமல் மடத்துக்குள் போலீசார் நுழைந்து இளையவரை கைது செய்தது ஏன்? என்றுஆணையம கேள்வி எழுப்பியுள்ளது.
இரு மடாதிபதிகளும் கைதானால் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் பூஜைகள் தடைபடும், பக்தர்களின் மனம் புண்படும் என்றுபத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன.
மேலும் சங்கராச்சாரியார் போலீஸ் காவலில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதி சில தொலைக்காட்சிகளுக்கு கசியவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கை சந்திக்கும் ஒருவரது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கருத இடம் உள்ளது.
இதற்கான விளக்கத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் இருவாரங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications