சங்கர மட ஐ.ஐ.ஐ.டிக்கு அனுமதி திடீர் ரத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jeyendrarசங்கர மடம் சார்பில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.ஐ.டி) தொடங்குவதற்கு கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை மத்திய அரசுதிடீரென ரத்து செய்து விட்டது.

மடம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஐ.ஐ.ஐ.டி. தொடங்குவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. கடந்தஆண்டு மத்திய அரசு இதற்கு அனுமதியும் அளித்தது. அப்போது பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்ததால் உடனடியாக அனுமதி கிடைத்துவிட்டது.

ஆனால் தற்போது இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்குக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சங்கர மடத்தால் இது போன்ற உயர் தொழில்நுட்பக் கல்விநிறுவனத்தை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய மனித வளத்துறை அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

கல்வி விஷயத்தில் பாஜக ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷியால் தரப்பட்ட பல்வேறு அனுமதிகளையும், மேற்கொள்ளப்பட்ட பல்வேறுதிருத்தங்களையும் இப்போதைய அமைச்சர் அர்ஜூன் சிங் புரட்டிப் போட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+