10 நாளில் குற்றப்பத்திரிக்கை: 2 மாதங்களில் வழக்கு முடிகிறது!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் இன்னும் 10 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று தெரிகிறது. அதேபோலஇந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி 2 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தயாக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திட்டமிட்ட காலத்துக்கு 30நாட்களுக்கு முன்னதாகவே இதைத் தாக்கல் செய்துவிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இன்னும் ஒரு வாரத்தில் குற்றப் பத்திரிக்கை தயாராகி விடும் என்றும், 10 நாட்களுக்குள் அது நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுவிடும் என்றும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விரைவு நீதிமன்றத்திற்குமாற்றப்படும் எனத் தெரிகிறது.
இதனால் 2 மாதத்திலேயே வழக்கு நடத்தி முடிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications