நிவாரணம்: ஜெயலலிதாவுடன் சரத்பவார் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Medical camp in Tsunami hit area

சுனாமியால் தமிழகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு நிவாரண நிதி வழங்குவது தொடர்பான விதிகள் மாற்றப்படும்என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.

தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக ஆராய சரத் பவார் நேற்றிரவு சென்னை வந்தார். இன்று முதல்வர் ஜெயலலிதாவைதலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

பின்னர் வெளியே வந்த சரத்பவார் நிருபர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் இயல்பு நிலை இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த எனது சக அமைச்சர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், மணிசங்கர் அய்யர்மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தமிழகத்திற்கு நிதி வழங்க புதிய முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நிதி ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய விதிகளின்படி நிவாரண நிதி வழங்கப்படும். பிரதமர் மன்மோகன் சிங்கும் இதை ஏற்றுக்கொண்டார்.

வீடிந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தருவது, மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்.மீனவர்கள் புதிய படகுகளை வாங்கவும், சேதமடைந்த படகுகளை பழுதுபார்க்கவும் நிதியுதவி அளிக்கப்படும்.

இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை தமிழக அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது. இது குறித்து டெல்லியில் ஆராய்ந்து, ஒருவாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+