ஜெயேந்திரர்: டெல்லியில் காஞ்சி மட பக்தர் தீக்குளிப்பு
டெல்லி:
ஜெயேந்திரர் மீதான கைது நடவடிக்கையால் மனமுடைந்த பக்தர் ஒருவர் டெல்லியில் தீக்குளித்தார். போலீஸார் அவரைக் காப்பாற்றிமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் ஒருவர் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். அப்பகுதியில்இருந்த போலீஸார் உடனடியாக தீயை அணைத்து, அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்சேர்த்தனர்.
விசாரணையில் அவர் பீகார் மாநிலம் சசராம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் ஷர்மா என்பது தெரியவந்தது. தீக்குளித்ததற்குக் காரணமாகஅவர் கூறியதாவது:
கடந்த 2 மாதங்களாக ஜெயேந்திரர் கைது காரணமாக மன வேதனையில் இருந்தேன். அவருக்கு ஆதரவாக போராட முடிவு செய்துதீக்குளித்தேன் என்றார்.
தற்கொலை முயற்சிக்கு முன்பு இவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், மடாதிபதியைக் கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.இதனாலேயே நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications