சீனா: ஜனநாயக ஆதரவு கம்யூனிஸ்ட் தலைவர் மரணம்
பெய்ஜிங்:
சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மீது டாங்கிகளை ஏற்றிக் கொன்றஅரசின் செயலைக் கண்டித்ததால் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவருமான ஷோ சியாங் இன்று மரணமடைந்தார்.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் வாய்ந்த பதவியில் இருந்த ஷியாங், 1989ல் ஜனநாயகத்துக்காக மாணவர்கள் நடத்தியபோராட்டத்தை ராணுவத்தைக் கொண்டு ரத்தக்களறியுடன் அடக்க டெங் சியோ பிங் உத்தரவிட்டபோது அதை எதிர்த்தார்.
இதனால் அவரைக் கைது செய்தது சீன அரசு. வீட்டுக்காவலிலேயே முடக்கி வைக்கப்பட்ட அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
இவரது மறைவைத் தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் ஜனநாயகம் கோரி போராட்டத்தில் குதிக்கலாம் என்ற பரபரப்பு சீனாவைத் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் தியானென்மென் சதுக்கத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பாதுகாப்பும், உளவுப் பிரிவினரின் கண்காணிப்பும்அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தியானென்மெனில் நடந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை சீன ராணுவம் கொன்று குவித்தது நினைவுகூறத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications