ரகுவும் குண்டர் சட்டத்தில் கைதாகிறார்
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரின் தம்பி ரகுவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காஞ்சி தனிப்படை போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கூலிப் படையினரான கதிரவன், சின்னா உள்ளிட்ட 6 பேர்குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் விரைவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவுள்ளனர்.
ஜாமீனில் கூட ஓராண்டுக்கு வெளியில் வர முடியாத சிறை தண்டனை இது.
இந் நிலையில் வியேந்திரரின் தம்பி ரகுவையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் முடிவுசெய்துள்ளனர். இதுதொடர்பான நடவடிக்கை (ஆட்சித் தலைவரிடம் அனுமதி கோருவது உள்ளிட்ட) தொடங்கிவிட்டதாக தனிப்படை போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசனுக்கு இதுதொடர்பான கோப்புகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாகத்தெரிகிறது.
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையை ஏற்பாடு செய்ததாக ரகு மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். டிசம்பர்30ம் தேதி ரகு கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே விஜயேந்திரரோடு ரகுவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார்காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications