மதுரை: கோவிலை பூட்டி நிர்வாகிகள் போராட்டம்
மதுரை:
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை இந்து அறநிலையத்துறைதனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதை எதிர்த்து கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் கோவிலைப் பூட்டிபோராட்டம் நடத்தினர்.
300 ஆண்டு பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலை விஸ்வகர்மா சமூகத்தினர்நிர்வகித்து வருகின்றனர்.
இக் கோவிலில் நிதி முறைகேடுகள் நடந்ததாக சில ஆண்டுகளுக்கு முன் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்துகோவிலை இந்து அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு செய்தது.
இது தொடர்பாக மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் நிர்வாகிகளுக்கு இந்து அறநிலையத்துறை அனுப்பியகடிதத்தில், காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து கோவில் காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் சார்பில் மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது. இதில் நிர்வாகிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. இதில் அறநிலையத்துறைக்கு சாதகமாக சமீபத்தில் தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து கோவிலை கையகப்படுத்துமாறு கூடலழகர் பெருமாள் கோவில் நிர்வாகிகளுக்குஅறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுப்படி கூடலழகர் கோவில் நிர்வாகிகள் காமாட்சிஅம்மன் கோவிலுக்கு சென்றனர்.
ஆனால் அவர்களை எதிர்த்து, கோவிலைப் பூட்டிய விஸ்வகர்மா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் கோவிலைஒப்படைக்க மாட்டோம் என்று கூறி சாலையில் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து அகன்றுச் சென்றுவிட்ட கூடலழகர் கோவில் நிர்வாகிகள் இது தொடர்பாகபோலீஸில் புகார் செய்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications