தொலைபேசி கட்டணம் உயர்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தொலைபேசிகளுக்கான அழைப்புக் கட்டணத்தையும், வாடகைக் கட்டணத்தையும் உயர்த்த வாய்ப்பிருப்பதாக பிஎஸ்என்எல் தலைமைநிர்வாக இயக்குனர் ஏ.கே.சின்ஹா தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து பி.எஸ்.என்.எல். வசூலிக்கும் கட்டணத்தை தொலைத் தகவல் கட்டுப்பாட்டு ஆணையம்(டிராய்) குறைத்தது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.1,254 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தொலைபேசி சேவையைத் தொடரவும், விரிவுபடுத்தவும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க தொலைபேசி மாதக்கட்டணத்தையும், அழைப்புக் கட்டணத்தையும் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

மேலும் இலவச அழைப்புகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறத்தை விடகிராமப்புறங்களில் மாதக்கட்டணம் ரூ.50 முதல் ரூ.100 வரை குறைவாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

மொத்த செலவின் அடிப்படையில் பார்த்தால், மாத வாடகையாக ரூ.362 வசூலிக்க வேண்டும். மேலும் 2 நிமிடம் பேச ரூ.1.20 வசூலிக்கடிராய் பரிந்துரைத்தது. ஆனால் 3 நிமிட நேரம் பேச ரூ.1.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதை 2 நிமிடமாகக் குறைக்கலாமா என்பதுகுறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+