குற்றப்பத்திரிக்கை தாக்கலாகும் வரை ஜெயேந்திரர் மெளன விரதம்!
கலவை:
குற்றப்பத்திரிக்கை தாக்கலாகும் வரை ஜெயேந்திரர் மெளன விரதத்தில் இருப்பார் என்று விசுவ இந்து பரீஷத் துணைத் தலைவர்வேதாந்தம் நிருபர்களிடம் கூறினார்.
இன்று ஜெயேந்திரரை சந்தித்துப் பேசிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
உலக அமைதிக்காக வி.எச்.பி. சார்பில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 5 நாள் யாகம் நடத்தப்படும். பிப்ரவரி 6ம் தேதி சங்கராச்சாரியார்கள்கைதைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மன்னிப்பு கோர வலியுறுத்தியும் சென்னையில் பொதுக் கூட்டம் நடைபெறும்.
இதில் 1லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாகத்தின் கடைசி நாளன்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, பெஜாவர் மடாதிபதிஆகியோர் கலந்து கொள்வார்கள். மறுநாள் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்வார்கள்.
சங்கராச்சாரியார்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.
சங்கராச்சாரியார் மெளன விரதத்தில் இருப்பதால் மற்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க முடியவில்லை.
3வது சங்கராச்சாரியார் நியமிக்கப்படுவார் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஸன் கூறியது, இந்த விஷயத்தை அவர் தவறாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட குழப்பமாகும். ஏற்கனவே 2 சங்கராச்சாரியார்கள் இருக்கிறார்கள். எனவே 3வதாக ஒருவரை நியமிக்க வேண்டியஅவசியமில்லை.
குற்றப்பத்திரிக்கை தாக்கலாகும் காலம் முடியும் வரை (90 நாட்கள்) ஜெயேந்திரர் மெளன விரதத்தில் இருப்பார். இது அவரே எடுத்தமுடிவாகும். இது குறித்து வேறெதுவும் அவர் கூறவில்லை.
ஜெயேந்திரர் ஒரு மாதம் கழித்து வட இந்திய பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இப்போது உலக மக்களின் நலனுக்காக, குறிப்பாகசுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அவர் தியானம் செய்து வருகிறார்.
ஜெயேந்திரர் சந்நியாசி என்பதால் எவர் மீதும் அவருக்கு விருப்போ, வெறுப்போ கிடையாது. அவர் மீது வழக்கு தொடுத்தவர்கள் மீது கூடஅவருக்கு எந்த வெறுப்பும் கிடையாது.
மடத்திற்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை முதலில் ஆராய்ந்த நீதிபதி நானாவதி கமிஷன் இதில் சதி இருப்பதாகக் கூறியது. ஆனால் பானர்ஜிதலைமையிலான கமிட்டி ஒரு மாத்திற்குள்ளாகவே இதில் சதி ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.
இதற்கு அரசியலே காரணமாகும். யாரையோ மகிழ்ச்சிப்படுத்தவும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தலை கருத்தில் கொண்டும்இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications