இந்தியப் படைகள் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு
பூஞ்ச்:
13 மாத சண்டை நிறுத்தத்தை மீறி, காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்துதாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
காஷ்மீரில் கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் சண்டை நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இந் நிலையில் நேற்றிரவுபாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இந்திய தடுப்பு முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.
பூஞ்ச் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள 16 ராணுவ தடுப்பு முகாம்கள் மீது நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தத்தாக்குதல் நடைபெற்றது. இதில் பூஞ்ச் நகரின் ஆஸாத் மொஹல்லா பகுதியில் வசிக்கும் அமர்நாத் என்பவரது மகள் காயமடைந்தார்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் தீபக் சமணவீர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தத் தாக்குதலின்போது இந்தியத் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இது போர் நிறுத்தத்தை மீறிய செயலாகும். முதல் முறையாகஇவ்வாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் முழு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அனைத்து முகாம்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லைஎன்று கூறினார்.
பிரிகேடியர் கடோக் கூறுகையில்,
தற்போதுள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. இந்தத் தாக்குதலை நடத்தியது தீவிரவாதிகளா என்பதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் ராணுவம் மீற விரும்புவதாக நாங்கள் கருதவில்லை.
தீவிரவாதிகள் ஊடுறுவதற்கு ஏதுவாக தடுப்பு முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். இந்த மோதலில் 6 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர் என்றார்.
பாகிஸ்தான் மறுப்பு:
இந் நிலையில், பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை என்று அந் நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் செளகத் சுல்தான் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியப் பகுதியில் குண்டு வெடித்ததை பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்டுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் எந்ததாக்குதலையும் நடத்தவில்லை. இந்த சம்பவம் குறித்து எங்களது வீரர்களுக்கு எதுவும் தெரியவில்லை. நாங்கள் போர் நிறுத்தத்தைமீறவில்லை என்றார்.
இந்தத் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு எல்லைப் பகுதி கண்காணிப்பு டைரக்டர் ஜெனரல்களும்தொலைபேசியில் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து லெப்டினென்ட் ஜெனரல் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் கண்காணிப்பு டைரக்டர் ஜெனரல் இந்தச் சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இது குறித்து விசாரித்து விட்டுஇந்தியாவுடன் பேசுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை போர்நிறுத்த மீறலாகவே இந்தியா கருதுகிறது.
இருப்பினும் பதில் நடவடிக்கை இந்தியா விரும்பவில்லை. இந்த சம்பவத்தை பாகிஸ்தான் அரசு சற்று தீவிரமாகவே கவனிக்கும் என்றுநம்புகிறோம். இந்தப் பகுதியில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து தெரியவில்லை.
மொத்தம் 12 ரவுண்ட்கள் சுடப்பட்டிருக்கிறது. 60 மி.மீ. மற்றும் 88 மி.மீ. ரக பீரங்கிள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பீரங்கிகள்தீவிரவாதிகளிடமும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, ஹிஸ்புல் முஜாஹிதீன்தீவிரவாதிகளோடு ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 2 ரேடியோ செட்கள், 13 கிரானைடுகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications