ஜெயேந்திரருடன் நடராஜன் சந்திப்பு: சமரச முயற்சி?
கலவை:
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கலவைக்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் கலவை சங்கர மடத்தில் தங்கியுள்ளார். அங்கு அவரைபலரும் சந்தித்துப் பேசி வருகிறார்கள், ஆசி பெற்று வருகிறார்கள்.
இந் நிலையில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் நேற்றிரவு திடீரென கலவை வந்தார். இரவு 9 மணியளவில் மடத்திற்கு வந்த அவர் ஒருமணி நேரம் ஜெயேந்திரருடன் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் இரவு 10.10மணியளவில் வெளியே வந்த நடராஜனை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு என்ன பேசினீர்கள் என்றுகேட்டபோது, முன்பு ஒரு வழக்கில் நான் நிபந்தனை ஜாமீனில் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னை சங்கராச்சாரியார்என்னை தன் நண்பராகக் கருதி நன்கு கவனித்தார்.
அந்த விசுவாசம் மற்றும் மனிதாபிமானம் காரணமாகவே இப்போது ஜெயேந்திரரை சந்தித்துள்ளேன். இதில் எந்த உள்நோக்கம் ஏதும்இல்லை.
முன்பு ஜெயலலிதாவின் தூதுவராக, ஆலோசகராக இருந்துள்ளேன். அதெல்லாம் இப்போது இல்லை. காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவேஜெயேந்திரரை முதல்வர் ஜெயலலிதா கைது செய்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் ஒன்று என ஜெயலலிதா சொல்வதாக இருந்தால், சிவகாசி ஜெயலட்சுமி புகார் கூறிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்உள்ளிட்டோர் மீது ஏன் வழக்கு தொடரப்படவில்லை?, ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை?.
விரைவில் ஜெயேந்திரர் விடுதலை ஆவார். போலீஸார் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. எஸ்.பி. பிரேம்குமார் ஜெயலலிதாவைதவறான பாதையில் அழைத்துச் செல்கிறார். அதேபோல வக்கீல் ஜோதியும் தவறான பாதையில் ஜெயலலிதா இட்டுச் செல்கிறார். அவருக்குகுற்றப் பிரிவு சட்டங்கள் சரியாகக் கூடத் தெரியாது என்றார் நடராஜன்.
ஜெயேந்திரர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதே அவரை சந்திக்க நடராஜன் முயன்றார். ஆனால் பல மணி நேரம்காத்திருந்தும் கூட சிறை நிர்வாகம் அவருக்கு அனுதி தரவில்லை.
இந் நிலையில் கலவைக்கு வந்து ஜெயேந்திரரைத் சந்தித்துப் பேசியுள்ளார். இப் பேச்சுவார்த்தையின்போது சமரசத் திட்டம்விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications