ஜெயேந்திரர்..ரஜினி.. அரசியல்.. ஜெயில்..
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வர ஜெயேந்திரர் முயன்றதால் தான் அவருக்கு எதிராக கொலை வழக்குப்பாய்ந்ததாக செய்தி பரவியுள்ளது.
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் வசிக்கும் கேரளத்தில் இருந்து வெளிவரும் முன்னணி ஆங்கில வார இதழான த வீக் மற்றும் முக்கியஇதழ்கள் பலவும் இதையே முக்கிய காரணமாகக் குறிப்பிட ஆரம்பித்துள்ளன.
ரஜினி மீது ஜெயேந்திரருக்கு அன்பும், ஜெயேந்திரர் மீது ரஜினிக்கு அசைக்க முடியாத பக்தியும் உண்டு.
ஒரு முறை பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் இருவரும் சேர்ந்தே சென்னை வந்துள்ளனர். அப்போது ரஜினி தன்னிடம் கேட்டஆன்மீகக் கேள்விகள் மிகவும் ஆச்சரியமானவையாகவும், மிகுந்த ஆழமானதாகவும் இருந்ததாக பத்திரிக்கைகளில் சிலாகித்திருந்தார்ஜெயேந்திரர்.
திராவிட இயக்கங்கள் ஊறி வளர்ந்த தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையும் மக்கள் செல்வாக்கும் கொண்ட ரஜினி அரசியலுக்கு வந்தால்நல்லது என்று கருதிய ஜெயேந்திரர் அவரிடம் பலமுறை இதை வலியுறுத்தினாராம்.
ஆனால், சினிமாவில் மட்டுமே எந்த முடிவையும் விரலை சுண்டியபடி உடனே எடுக்கும் ரஜினி இந்த விஷயத்தில் பிடி கொடுக்காமல்நழுவியே வந்திருக்கிறார்.
ரஜினியை அரசியலுக்கு வந்தால் திமுகவை விட, சினிமா- அரசியல் பின்னணி கொண்ட தனக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என்பதைஉணர்ந்த அதிமுக தலைமை இதனால் கடுப்பாகியுள்ளது.
இது குறித்து ஜெயேந்திரரிடம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த நேரம் என்பதால்அதிமுகவின் அட்வைஸ் காதில் வாங்கப்படவில்லை.
இந் நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் ரஜினியை கொம்பு சீவிவிட்டு களமிறக்க பாஜக விரும்ப, அதை நிறைவேற்றும் வேலையில்ஜெயேந்திரர் இறங்கினார். இறுதியில் பாஜகவையும் அதனுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவையும் ஆதரிக்கிறேன் என்று அறிக்கைவாசித்தார் ரஜினி.
இந் நிலையில் சங்கரராமன் கொலை நடக்க, இது தான் வாய்ப்பு என்று மடத்தின் மீது போலீஸை ஏவி விட்டார்கள் என்கிறார்கள்.
சமீபத்தில் கலவைக்கு வந்து தன்னைச் சந்தித்த ரஜினியிடம் இதைச் சுட்டிக் காட்டினாராம் ஜெயேந்திரர். மேலும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வைத்தார் என்கிறார்கள்.
ரஜினியோ வழக்கம்போல் எதுவும் சொல்லாமல் கலவையில் இருந்து கிளம்பி வந்திருக்கிறார்.
இந்தச் செய்தியைக் கேட்டு திமுக தரப்பிலும் பல்லைக் கடிக்கிறார்கள். ஜெயலலிதாவோடு சேர்த்து நமக்கும் ரஜினி மூலம் தலைவலி தரஜெயேந்திரர் திட்டமிடுவதாக அறிவாலயம் டென்சனாகியுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications