ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ்: 3வது சுற்றில் சானியா
மெல்பர்ன்:
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் ஹங்கேரியின் பெட்ரா மன்டூலாவை வீழ்த்தி இந்தியாவின் சானியா மிர்சா3வது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சிண்டி வாட்சனை வீழ்த்திய சானியா, 2வது சுற்றில் பெட்ரா மன்டூலாவை எதிர் கொண்டார்.இப்போட்டியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்ற சானியா 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஷரபோவா வெற்றி:
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பல்கேரியாவின் செசில் கராடன்ட்செவாவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில்தோற்கடித்தார்.
ரஷ்யா வீராங்கனைகள் ஸ்வெட்லானா கஸ்னட்சோவா 6-1, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜெசிகா கிர்க்லான்டையும், நாதியாபெட்ரோவா 6-1, 6-2 என்ற செட்களில் விர்ஜின் ரஸானோவையும், வெரா ஜூவோனரிவா 6-4, 6-2 என்ற செட்களில் சீனாவின் லுநன்னனையும் தோற்கடித்தனர்.
அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்சின் கேமிலி பின்னையும், பிரான்சின் மவுரிஸ்மோ 6-2,6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தாவையும் தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெடரர் வெற்றி:
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் பாப்ரிஸ் சான்டிரோவை 6-1, 6-1,6-2 என்ற செட்களில் வீழ்த்தினார்.
அமெரிக்காவின் ஆந்த்ரே அகாசி 6-4, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் தியதர் கைன்ட்மேனை வீழ்த்தினார்.
மோயா அதிர்ச்சி தோல்வி:
ஆண்கள் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் மோயா அதிர்ச்சி தோல்வியடைந்தார். இவர் 5-7, 3-6, 6-3, 3-6 என்ற செட்களில் சகநாட்டவரான கில்லர்மோ கார்சியா லோபசிடம் தோல்வி அடைந்தார். அதேபோல் பெண்கள் பிரிவில் ஜப்பானின் சுகியாமாவும்,பிரான்சின் மேரி பியர்சும் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
-
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications