சங்கரராமன் வழக்கு: இளையவர் 2வது குற்றவாளி!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயேந்திரரும், இரண்டாவது குற்றவாளியாக ரவிசுப்ரமணியம், மூன்றாவதுகுற்றவாளியாக அப்புவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் விஜயேந்திரரை போலீஸ் காவலில் எடுப்பது தொடர்பாக போலீஸ் தரப்பில் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றநீதிபதி உத்தமராஜன் முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விஜயேந்திரரை இரண்டாவது குற்றவாளியாக போலீஸார் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் கூலிப் படையை ஏற்பாடு செய்த ரவி சுப்பிரமணியத்துக்கு இணையான குற்றவாளியாக இந்த வழக்கில் விஜயேந்திரர்சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மடத்தின் வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில்,
25வது நபராகக் கைது செய்யப்பட்ட விஜயேந்திரரை 2வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். போலீசார் யாரை வேண்டுமானாலும் எந்தவரிசையிலும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கலாம். இதே போல சுந்தரேச அய்யரிடம் வரிசையாக 15 வெற்றுத் தாள்களில் கையெழுத்துவாங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு போகப் போகிறோம் என்றார்.
ஜாமீன் மனு: 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன்மனு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
கடந்த 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது 17ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து 19ம் தேதிக்கு (இன்றைக்கு)ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஜாமீன் மனு நீதிபதி வணங்காமுடி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை25ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
24ம் தேதி வரை காவல்:
இந் நிலையில் சங்கரராமன் கொலையில் கூலிப் படையினருக்குப் பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விஜயேந்திரரிடம் காஞ்சிபுரம்தனிப்படை போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்டவர் விஜயேந்திரர். ஆரம்பத்தில் குற்றவாளிகள் பட்டியலில் கடைசிஇடத்தில் இருந்த விஜயேந்திரர் தற்போது 2வது குற்றவாளியாக "உயர்த்தப்பட்டுள்ளார்".
அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் நேற்று மாலை காஞ்சிபும் தனிப்படை போலீஸார் எடுத்தனர். அவரிடம் காட்டுப் பங்களாவில்வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கூலிப் படையினருக்குப் பணம் பட்டுவாடா செய்தது உள்ளிட்டவை தொடர்பாக போலீஸார் விஜயேந்திரரிடம் துருவித் துருவி கேட்டனர்.போலீஸாரின் பல கேள்விகளுக்கு விஜயேந்திரர் விலாவாரியாக பதிலளிக்க மறுத்து, ஆம், இல்லை என்று ஒற்றை பதிலாக கூறி வருகிறார்.
சங்கர மடத்திற்கு யாரெல்லாம் வருவார்கள், அடிக்கடி வருபவர்கள் யார், சங்கரராமன் கொலை சதித் திட்டம் குறித்துத் தெரியுமா, கூலிப்படையினருக்குப் பணம் உங்கள் மூலம் சென்றதா, அப்படியானால் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது உள்பட பல கேள்விகளைபோலீஸார் கேட்டுப் பதிலைப் பெற்றுள்ளனர்.
இதுதவிர 2வது குற்றவாளியாக இத்தனை நாட்கள் சேர்க்கப்பட்டிருந்த ரவிசுப்ரமணியம், விஜயேந்திரர் குறித்து தனது வாக்குமூலத்தில்கூறிய தகவல்களை விஜயேந்திரரிடம் கேட்டு அவரை திணறடித்துள்ளனராம் காஞ்சிபுரம் போலீஸ்.
சங்கர மடத்திற்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விஜயேந்திரரிடம் போலீஸார் கேட்டுள்ளனர். இந்தக் கேள்விகளுக்குப்பதிலளிக்க முடியாமல் விஜயேந்திரர் திணறியதாகத் தெரிகிறது. பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத விஜயேந்திரர் என்னை விட்டுவிடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கூறியதாகவும் தெரிகிறது.
நேற்று இரவு 11 மணி வரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விஜயேந்திரர் இன்றும் காலை 9 மணி முதல் விசாரிக்கப்பட்டார்.மாலை 5 மணிக்கு அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வருகிற 24ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சென்னை மத்திய சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
1,500 பக்க குற்றப்பத்திரிக்கை:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தயாரித்துள்ளதாகத்தெரிகிறது. இந்தப் பணியில் 80க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 350 சாட்சிகளின் விசாரணை அறிக்கை, 500க்கும் மேற்பட்டஆவணங்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவுள்ளன.
சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களும் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்படும் என்று போலீஸார் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
அன்று பக்ரீத் நாள் என்றாலும் கூட திட்டமிட்டபடி அன்றே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications